திருமணம் முடிந்த சில நாட்களிலே கணவனுக்கு நேர்ந்த கொடுமை! மனைவி செய்த கொடூர செயல்!



newly married couple issue

நாகை மாவட்டம் தலைசங்ககோட்டையை சேர்ந்தவர் சதீஷ் குமார். இவர் புதூரை சேர்ந்த கலைமதி என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்தநிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் இருவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்த போதிலும், இருவருக்கும் இடையே திருமணம் ஆன சில வாரங்களிலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறு ஏற்பட்டுள்ளது.

இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சில நாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

husband and wife

இதனால் கோபமடைந்த கலைமதி அவருடைய கணவர் சதீஷ்குமாரை அருகில் இருந்த கல்லை எடுத்து தாக்கியுள்ளார். அவருடன் வந்த கலைமதியின் தந்தையும் மருமகனை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.