கொரோனா வைரஸ் குறித்த தகவல்களுக்கு தனி வலைதளம்.. தமிழக அரசின் துரித நடவடிக்கை!

கொரோனா வைரஸ் குறித்த தகவல்களுக்கு தனி வலைதளம்.. தமிழக அரசின் துரித நடவடிக்கை!


New website for corono

உலகம் முழுவதும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பரிமாற தமிழக அரசு stopcoronatn.in எனும் வலைதளத்தினை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலா தமிழக அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தீவிர சோதனைக்கு பிறகே வெளியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

Coronovirus

சந்தேகப்படும் அறிகுறியுடன் இருப்பவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றனர். மேலும் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு, தகவல் பறிமாற்றம், தமிழக அரசின் நடவடிக்கைகள் போன்றவைகளை மக்களுக்கு எளிதில் வெளிப்படுத்த தமிழக அரசு stopcoronatn.in எனும் வலைதளத்தினை உருவாக்கியுள்ளது. இதில் கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள், தனிநபர் தகவல் அளிக்கும் பகுதி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.