தமிழகம்

மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! கடைகள் இயங்கும் நேரம் அதிரடி மாற்றம்!! அரசு முக்கிய உத்தரவு..

Summary:

கொரோனா பரவலை தடுக்கும்வகையில் கோவையில் கடைகள் திறக்கும் நேரம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர்

கொரோனா பரவலை தடுக்கும்வகையில் கோவையில் கடைகள் திறக்கும் நேரம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை சற்று குறைந்திருந்தநிலையில், தற்போது பல இடங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு சற்று உயரத்தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா 3 வது அலை குறித்த அச்சம் தற்போதில் இருந்த மக்கள் மத்தியில் வர தொடங்கிவிட்டது.

அதேநேரம், கொரோனா மூன்றாவது அலை பரவலை தடுக்க தமிழக அரசும் தற்போதில் இருந்தே பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. சென்னையில் பல முக்கிய இடங்களில் கடைகள் திறக்க அரசு தடை விதித்துள்ளது. தற்போது கோவையிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான 10 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கடைங்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனையகங்கள், மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement