பள்ளி சுற்றுச்சுவர் அருகே கேட்ட குழந்தையின் அழுகை சத்தம்..! பிறந்து ஒரு மணி நேரத்தில் தூக்கி வீசப்பட்டு சென்ற அவலம்..!New born baby found in road side near velloor

வேலூர் மாவட்டம் அருகே பிறந்து சில மணிநேரங்கள் மட்டுமே ஆன நிலையில் பெண் சிசு ஒன்று சாலை ஓரத்தில் வீசி செல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு அரசு பள்ளி சுற்றுச்சுவர் அருகே குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் நோக்கி சென்ற அக்கம் பக்கத்தினர் அங்கிருந்த புதர் அருகே துணியில் சுற்றப்பட்டவாறு இருந்த பெண்குழந்தை ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

Crime

உடனே இதுகுறித்து அந்த பகுதி காவல் நிலையத்திற்கும், வட்டாட்சியருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிறந்து சில மணி நேரங்கள் மட்டுமே ஆன அந்த பிஞ்சு குழந்தையை மீட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து பேசியுள்ள அதிகாரிகள், குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், குழந்தை மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன், சமூக நலத்துறை வழிகாட்டுதலின்படி திருப்பத்தூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

பிறந்து சில மணிநேரங்கள் மட்டுமே ஆன நிலையில், பிஞ்சு குழந்தை அனாதையாக தூக்கி வீசப்பட்டு  சென்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.