குழந்தையின் தொப்புள்கொடி ஈரம் கூட காயல..! கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்..!

குழந்தையின் தொப்புள்கொடி ஈரம் கூட காயல..! கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்..!


New born baby dead body found in well near madurai

பிறந்து இரண்டு நாட்களே ஆன பிஞ்சு குழந்தை ஓன்று வைகை ஆற்றில் நடுவே அமைக்கப்பட்டுள்ள உறைகிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள குன்னூர் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் சிலர் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது ஆற்றுக்கு நடுவே குடிநீருக்காக அமைக்கப்பட்டிருந்த உறைகிணற்றை பார்த்தபோது கிணற்றுக்குள் குழந்தையின் சடலம் ஓன்று கிடந்துள்ளது.

இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குழந்தையை மீட்டனர். குழந்தையின் தொப்புள் கொடியில் மாட்டப்பட்டிருந்த கிளிப்பைகூட கழட்டாமல் யாரோ அந்த குழந்தையை கிணற்றுகில் தூக்கி வீசி கொலை செய்துள்ளனர்.

குழந்தை இறப்பதற்கு முன் நல்ல ஆரோக்கியமாக இருந்துள்ளதாகவும், குழந்தை பிறந்து இரண்டு நாட்களே ஆகியிருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தையை கிணற்றில் தூக்கி வீசியது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.