நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது எப்படி? சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் அதிரடி!



Neet exam fraud

சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார் என புகார் எழுந்தது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனால், உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தலைமைமறைவானார். தேனி போலீசார் தனிப்படை அமைத்து உதித் சூர்யா மற்றும் அவருடைய குடும்பத்தினரை தீவிரமாக தேடிவந்தனர்

இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்கு மாற்ற உத்தரவிடபட்டது. இதைத்தொடர்ந்து திருப்பதியில் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து இதனைத் தொடர்ந்து உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.

NEET exam

இந்த விசாரணையில் மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் உதித் சூர்யாவிற்கும் அவரது தந்தை ஆகிய இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.