பண்ருட்டி அருகே, பள்ளியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் ஊர் பிரச்சனையாக மாறியதால் பரபரப்பு ..போலீசார் குவிப்பு...!

பண்ருட்டி அருகே, பள்ளியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் ஊர் பிரச்சனையாக மாறியதால் பரபரப்பு ..போலீசார் குவிப்பு...!


Near Panruti, a clash between students in a school has turned into a town problem, causing excitement .. police presence..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் ஊருக்குள் இரு தரப்பு மோதலாக மாறியதால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வேலங்காடு மற்றும் கயப்பாக்கம் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது  ஏற்பட்ட தகராறில் இரு பிரிவாக சண்டை போட்டுள்ளனர். இதை பார்த்த ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து அறிவுரை கூறு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவல் வேலங்காடு மற்றும் கயப்பாக்கம் கிராமத்தில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. வேலங்காடு கிராமத்தில் உள்ளவர்கள், கயப்பாக்கம் கிராமத்திற்கு உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துச் சென்று மோதலில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் ஊருக்குள் புகுந்த தாக்கிய எதிர் தரப்பினரை தடுப்பதற்காக பெண் ஒருவர் இளைஞரின் சட்டையை பிடித்து கடுமையாக சண்டையிட்டார். அந்த பெண்ணுக்கு ஆதரவாக அங்குள்ள சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் கையில் மரக்கட்டைகளை எடுத்துள்ளனர்.

அவர்களை எதிர் தரப்பினர் அடித்ததால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் சாய்க்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மேலும் இந்த சம்பவத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டவர்களை செல்போன் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு தேடி வருகின்றனர். அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால், இரு கிராமங்களிலும் ஏராளமான காவல்துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.