தெரிந்த நபருடன் காரில் வருவதாக கூறிய மனைவி! மறுநாள் குட்டையில் சடலமாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்.

தெரிந்த நபருடன் காரில் வருவதாக கூறிய மனைவி! மறுநாள் குட்டையில் சடலமாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்.


Namakkal beautician shophana murdered unknowingly

நாமக்கல் மாவட்டம் இறையமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா. இவர் நாமக்கல் திருச்செங்கோட்டில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் கடந்த 10 வருடங்களாக வேலைபார்த்து வந்துள்ளார். தினமும் வேலை முடிந்து இறையமங்கலம் செல்லும் பேருந்தில் இரவு நேரத்தில் பயணம் செய்து வந்துள்ளார் ஷோபனா.

இவருக்கு திருமணம் முடிந்து செந்தில் என்ற கணவரும், ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு ஷோபனா வீடு திரும்பும் அந்த கடைசி பேருந்தை தவறவிட்டுவிட்டதாகவும், இதனால் தனக்கு தெரிந்த ஒருவரின் காரில் வந்துகொண்டிருப்பதாகவும் ஷோபனா தனது கணவர் செந்திலுக்கு போன் செய்து கூறியுள்ளார்.

Crime

இந்நிலையில் நீண்ட நேரமாகியும் ஷோபனா வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த செந்தில் மற்றும் உறவினர்கள் ஷோபனாவை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீசாரும் சேர்ந்து தேடியுள்ளனர்.

இதனை அடுத்து அடுத்தநாள் காலை 9 மணி அளவில் புள்ளிபாளையம் பகுதியில் இருக்கும் குட்டை ஒன்றில் ஷோபனா மர்மமான முறையில் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ஷோபனாவின் கணவர் மற்றும் உறவினர்கள் ஷோபனாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும், தனது குழந்தைக்காக ஷோபனா வாங்கியிருந்த புது உடைகள் அந்த பகுதியில் சிதறி கிடந்தது பார்ப்போர் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்தது.

ஷோபனா ஏன் கொலை செய்யப்பட்டார்? அவர் கடைசியாக யார் காரில் வந்தார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.