"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
பல பெண்களை ஏமாற்றி பாலியல் வழக்கில் கைதான நாகர்கோயில் காசிக்கு...!! ஆயுள் தண்டனை வழங்கிய விரைவு நீதிமன்றம்...!!
நாகர்கோவில் காசிக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.
பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் காசிக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டில் வசித்து வந்தவர் சுஜி என்ற காசி (27). இவர் சமூக வலைதளத்தில் பல பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார் மற்றும் கந்து வட்டி புகாரின் அடிப்படையிலும் நாகர்கோவில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் காவல் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் போன்றவற்றில் ஆறு வழக்குகள் பதிவாகின.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்றும், எனவே வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை தமிழக அரசு, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டது.
கடந்த 2020-ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதானார். காசியின் லேப்டாப் மற்றும் மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர். 120 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆனால் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்தனர் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் காசிக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது காசியை பாளையங்கோட்டை சிறையில் அடைந்துள்ளனர்.