தமிழகம்

ஒதுக்குப்புறத்தில் இருந்த காதலர்களை மிரட்டி வீடியோ எடுத்த மர்ம கும்பல்! அதிர்ச்சி பின்னணி!

Summary:

Mystery gang tortured love couple

திருநெல்வேலி மாவட்டத்தின் புறநகர் பகுதியான ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை பகுதி ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியாகும். அங்கு மாலை நேரங்களில் பைக் ரேஸ் பிரியர்கள், காதல் ஜோடிகள் அங்கு சென்று வருவது வழக்கமான நிகழ்வாக இருந்துள்ளது. ஆனால் அந்த பகுதிகளில் நடமாடினாலே அவர்களிடம் வழிப்பறி நடப்பதும் அதிகரித்துள்ளது. அதனால் அந்த இடங்களில் மக்கள் நடமாடவே அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட இடத்திற்கு ஒரு காதல் ஜோடி கடந்த வாரம் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு யாரும் இல்லாததால் அவர்கள் எல்லை மீறியதாக தெரிகிறது. இதனை மறைந்திருந்து பார்த்த சிலர் அவர்கள் அருகில் சென்று இருவரையும் பிடித்து தரையில் அமர வைத்துள்ளனர். அவர்களிடம் விசாரித்து, உங்களைப்பற்றி வீட்டில் சொல்லிவிடுவதாக துன்புறுத்தி உள்ளனர். அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த பணம், செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்த அந்த மிரட்டல் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

காதலர்களை மிரட்டிய அந்த கும்பல் பதிவு செய்த வீடியோ, தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சம்பந்தப்பட்ட காதலனை விசாரித்தபோது அனைத்தும் உண்மைதான் என கூறியுள்ளார். இதனையடுத்து காதல் ஜோடியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வந்தநிலையில் அருணாச்சலம் என்பவர் சிக்கியுள்ளார். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


Advertisement