தமிழக அரசு அரசாணை வெளியிட்ட முதல்வரின் முகவரி.! கெத்து காட்டும் தமிழக அரசு.!muthalvarin mugavari

முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, "முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து "முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வரின் முகவரி துறையில் மனுக்களுக்குத் தீர்வுகாண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.