சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
இளையராஜா இசையில்; பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு பாடல்...!
இளையராஜா தனது இசையில் சமூகத்தில் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பாடல் வீடியோவை உருவாக்கி உள்ளார்.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுகு இடையே தகவல் தொடர்பு அவசியம் என்றும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் குழந்தையிடம் பெற்றோர் மனம் வீட்டு பேச வேண்டும் என்றும், தவறினால் அது குழந்தைக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பாடல் உருவாகி உள்ளது.
குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக போராட மக்களை ஒன்றிணைக்கவும், பாலியல் குற்றம் செய்பவர்களை தண்டிக்கவும் பாடலில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
"யார் இந்த பேய்கள்" என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த பாடலை பா.விஜய் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா பாடி இருக்கிறார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.