தமிழகம்

தஞ்சையில் பரபரப்பு: ஊராட்சி மன்ற உறுப்பினர் படுகொலை! அதிர்ச்சி காரணம்!

Summary:

murder in thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வண்ணக்குடி பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக உள்ளார். இவரது  உறவுக்காரப் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் திருமணம் செய்வதற்காக பெண் கேட்டுள்ளார். 

ஆனால் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கல்யாணசுந்தரம் பெண் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நவீன் என்பவர், கல்யாணசுந்தரத்தை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கல்யாணசுந்தரம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் கல்யாணசுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தப்பி ஓடிய மகேந்திரன் மற்றும் நவீன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement