தமிழகம்

கடை முன்பாக சிறுநீர் கழித்த நபர்.! தட்டிக்கேட்ட பெண்.! மரணத்தில் முடிந்த தகராறு.!

Summary:

கடை முன்பாக சிறுநீர் கழித்த நபர்.! தட்டிக்கேட்ட பெண்.! மரணத்தில் முடிந்த தகராறு.!

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் சுப்பிரமணி என்பவர் வளையல் கடை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது கடை அருகில்  சந்தோஷ் கதிர்வேல் என்பவரும் வளையல் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில், நேற்றிரவு கடைகளை அடைக்கும்போது, சுப்பிரமணி என்பவர், சந்தோஷ் கதிர்வேலின் கடையின் முன்பாக சிறுநீர் கழித்துள்ளார். 

இதனைப்பார்த்த சந்தோஷ் கதிர்வேலின் தாய் சுகுணா, தூரமாக சென்று சிறுநீர் கழிக்கக் கூடாதா என்று சுப்பிரமணியிடம் கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்ட சுப்பிரமணியை தாக்கி, கழுத்தை நெரித்துள்ளார் சந்தோஷ் கதிர்வேல். கழுத்து நெறிப்பட்ட நிலையில், சுப்பிரமணி ஓமலூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார். 

இதனையடுத்து சுப்பிரமணி அங்கேயே ரத்தம் வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து இதையடுத்து ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று  சிகிச்சை பெற்றுவந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்து விட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் கதிர்வேல் மற்றும் அவரது தாய் சுகுணா ஆகியோரை தேடி வருகின்றனர்.


Advertisement