உன்னிடம் பேச வேண்டும், உடனே வா என அழைத்த கணவர்! மகனுடன் சென்ற மனைவி, கடைசியில் நிகழ்ந்த சோக சம்பவம்!

உன்னிடம் பேச வேண்டும், உடனே வா என அழைத்த கணவர்! மகனுடன் சென்ற மனைவி, கடைசியில் நிகழ்ந்த சோக சம்பவம்!


Murder

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கருப்பசாமி(45). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவி அமுத வள்ளியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டவர்.

இதனால் பொறுமையிழந்த அமுதவள்ளி தனது இரண்டு மகன்களையும் அதாவது சச்சின்குமார்(17),சஞ்சய் குமார் (14) இருவரையும் அழைத்து கொண்டு வாடகை வீட்டிற்கு சென்று வாழ்த்து வந்துள்ளனர்.

ஆனால் அப்பக்கூட விடாத கருப்பசாமி குடித்து விட்டு அங்கேயும் சென்று பிரச்சனை செய்து வந்துள்ளார். ஒரு அமுதவள்ளிக்கு போன் செய்த கருப்பசாமி உன்னிடம் போச வேண்டும், உடனே வா என அழைத்துள்ளார்.

Murder

உடனே அமுதவள்ளி தனது முத்த மகன் சச்சின் குமார் என்பவரை அழைத்து கொண்டு அவரது கணவரை பார்க்க சென்றுள்ளார். அங்கு கருப்பசாமி குடிப்போதையில் மனைவி அமுத வள்ளியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. அப்போது கருப்பசாமி ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து தனது மகனை தாக்க முயன்றுள்ளார். ஆனால் மகன் அதனை தடுத்து அதே அரிவாளால் தனது தந்தையை வெட்டியுள்ளார்.

அச்சம்பவத்தில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.