10 பவுன் நகையுடன் வா... இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்... மதுரையில் பரபரப்பு!!
மதுரை கே.புதூரை சேர்ந்தவர் பயாஸ்கான். இவர் மதுரையை சேர்ந்த சிறுமி ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளார். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதனையடுத்து பயாஸ்கான் ஆசைவார்த்தைகளை பேசி சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பயாஸ்கான் சிறுமியிடம் நாம் ஊரை விட்டு போகலாம் 10 பவுன் நகையுடன் வா என ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். அதனை நம்பி நகையுடன் சென்ற சிறுமியை ஏமாற்றி விட்டு நகையை எடுத்து சென்று தலைமறைவாகியுள்ளார் பயாஸ்கான்.
இச்சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதனையடுத்து போலீசார் தலைமறைவான பயாஸ்கானை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் சிறுமியிடம் வாங்கிய 10 பவுன் நகையை எப்படி பணமாக மாற்றுவது? என்று நண்பர்களான சதீஷ், சரவணகுமாரிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். பின் சரவணகுமாரின் தாய் மூலம் கே.புதூர், தனியார் கடையில் அடமானம் வைத்து 2 லட்சத்து 70 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர்.
பின்னர் அந்த பணத்தில் பயாஸ்கான் 1 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்து கொண்டு மீதம் உள்ளதை மற்ற மூவரும் பங்கிட்டு கொண்டது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் மற்றும் 10 பவுன் நகையை ஏமாற்றி சென்ற பயாஸ்கான் மற்றும் சதீஷ், சரவணக்குமார், முத்துலெட்சுமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நகை அடகு கடையில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பு உள்ள 10 பவுன் நகை மீட்கப்பட்டது.