அரசியல் தமிழகம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுகவுக்கு சம்பந்தம் இருக்குன்னு அப்பவே சொன்னோம்.! திமுக எம்.பி கனிமொழி

Summary:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். 

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், பைக் பாபு, ,கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றது. அந்த மூவரில் ஒருவர் அதிமுக பொள்ளாச்சி மாணவர் அணி நகர செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது.


இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும், மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது. எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement