தமிழகம்

இப்படி ஒரு சோகம் யாருக்கும் வரக்கூடாது.. 2 மகள்களுடன் ரயிலில் இருந்து கீழே குதித்த தாய்.. கண்கலங்கவைக்கும் காரணம்..

Summary:

வறுமையின் காரணமாக தாய் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை

வறுமையின் காரணமாக தாய் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாபிராம் சத்திரத்தை சேர்ந்த முனிலட்சுமி என்பவர் தனது இரு மகள்களுடன் சென்னை செண்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பயணித்துள்ளார். அவர்கள் சென்றுகொண்டிருந்த ரயில் செவ்வாப்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தபோது முனிலட்சுமி தனது இரண்டு மகள்களுடன் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இந்த தற்கொலை முயற்சியில், முனிலட்சுமியின் வலது கை முறிந்த நிலையில், அவரது இரண்டு மகள்களும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உடல்நலக்குறைவால் முனிலட்சுமியின் கணவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தநிலையில், வறுமையால் தவித்து வந்த முனிலட்சுமி மகள்களுடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. 


Advertisement