தமிழகம்

கண்ணை மூடிய கள்ளக்காதல்..! 6 வயது மகன்.! அடித்தே கொன்ற தாய்..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.

Summary:

Mother murder his own 6 years son

கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் அருண்- திவ்யா தம்பதியினர். இவர்களுக்கு அபிஷேக் என்ற 6 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர்.திடிரென அருண் மற்றும் திவ்யா தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்ப்படவே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

அதனை அடுத்து திவ்யாவுக்கு ராஜதுரை என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு நாள் திவ்யாவின் மகன் அபிஷேக்குக்கு அடிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தியுள்ளனர். அப்போது சந்தேகத்தின் பெயரில் திவ்யா மற்றும் ராஜதுரை என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சொந்த மகனை அவரது தாய்யே கொலை செய்துவிட்டு சிறுவன் உயிரிழந்ததாக கூறி நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது.

மேலும் திவ்யா மற்றும் ராஜதுரையின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற தாயே 6 வயது மகனை அடித்து கொலை செய்ததது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து திவ்யா மற்றும் ராஜதுரை ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement