அடக்கடவுளே... காதலை கைவிட மறுத்து மகள்... தாய் செய்த கொடூர சம்பவம்!!

அடக்கடவுளே... காதலை கைவிட மறுத்து மகள்... தாய் செய்த கொடூர சம்பவம்!!


Mother murder her daughter in nellai district

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள பாலமடை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சு - ஆறுமுகக் கனி தம்பதியினர். இவர்களுக்கு அருணா(19) என்ற மகள் உள்ளார். அருணா கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் அருணா இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இச்சம்பவம் அருணாவின் வீட்டிற்கு தெரியவரவே காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் வேறு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இச்சமயத்தில் விடுப்பிற்காக வீடு திரும்பிய அருணாவிற்கும் அவரது தாய்க்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Nellai District

அதனையடுத்து அருணாவின் தாய் பெற்ற மகள் என்று கூட பாராமல் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிய வரவே போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.