தமிழகம்

சார்..! என் மகன் மேல துர்நாற்றம் வீசுது..! மகன் உயிரிழந்தது கூட தெரியாமல் 3 நாட்களாக உடலுடன் வசித்துவந்த தாய்..!

Summary:

Mother live with son dead body for 3 days

மகன் உயிர் இழந்தது கூட தெரியாமல் அவரது தாய் தனது மகனின் சடலத்துடன் 3 நாட்கள் ஒரே வீட்டில் வசித்து வந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருநின்றவூர் சி.டி.எச். சாலை பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. தற்போது 35 வயதாகும் சரஸ்வதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது கணவர் ஜீவானந்தம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை பிரிந்து சென்று பெங்களூருவில் வசித்து வருகிறார். 

தற்போது சரஸ்வதி சாமுவேல் என்று தனது 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். சாமுவேல் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் சிறுவன் சாமுவேலுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுவன் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதிக்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக சரியான வேலை இல்லை என்பதால் தனது மகனை வீட்டிலேயே வைத்து வைத்தியம் பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் போலீசாருக்கு போன் செய்த சரஸ்வதி தன் மகனின் உடல் மீது எறும்புகள் மொய்ப்பதக்கவும், அவர் மீது துர்நாற்றம் வீசுவதாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே சரஸ்வதியின் வீட்டுக்கு விரைந்து சென்று அங்கு சோதனை செய்ததில் சரஸ்வதியின் மகன் சாமுவேல் உயிரிழந்த நிலையில் உடல் அழுகி சடலமாக கிடந்துள்ளார்.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து மூன்று நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. தனது மகன் உயிர் இழந்தது கூட தெரியாமல் சரஸ்வதி அதே வீட்டில் மூன்று நாட்கள் தங்கி இருந்துள்ளார். தற்போது சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement