இரண்டு மகள்களைக் கொன்றுவிட்டு இளம் தாயார் எடுத்த பகீர் முடிவு.! அதிர்ச்சி சம்பவம்.!

இரண்டு மகள்களைக் கொன்றுவிட்டு இளம் தாயார் எடுத்த பகீர் முடிவு.! அதிர்ச்சி சம்பவம்.!


mother-killed-two-daugter-and-commit-suicide

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராசி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளது. 

இந்த நிலையில் ரஞ்சித் குமார் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு காலமானார். இதனால் ராசி தனது குழந்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கணவர் இறந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் ராசி சோகத்துடனே இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் ராசி தனது இரு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தானும் தூக்க மாத்திரையை சாப்பிட்டுள்ளார்.

mother

மேலும் ராசி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் தீப்பற்றி எரிந்ததால் அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது ராசியும் அவரது குழந்தைகளும் சடலமாக கிடந்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவரை இழந்த துயரத்தில் மகள்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.