இப்படியும் ஒரு தாய்யா.? கூட்டுக் குடும்பத்தில் மகள்கள் அரங்கேற்றிய அசிங்கம்.! தாய் செய்த வெறிச்செயல் ! பதறவைக்கும் சம்பவம்.!

இப்படியும் ஒரு தாய்யா.? கூட்டுக் குடும்பத்தில் மகள்கள் அரங்கேற்றிய அசிங்கம்.! தாய் செய்த வெறிச்செயல் ! பதறவைக்கும் சம்பவம்.!


Mother killed two daughters for steeling money near trichy

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து உள்ள சமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சாந்தமீனா. இவர்களுக்கு லோகநாதன் (15) என்ற மகனும், கோகிலா (13), லலிதா (11) என்ற இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

இதனிடையே சாந்தமீனா தனது பிள்ளைகளுடன் சேர்ந்து தனது கணவரின் சகோதர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்றிருந்த நிலையில், அவரின் இரண்டு மகள்களும் வீட்டுக்குள் மயக்கமடைந்து கிடந்துள்ளனர்.

பிள்ளைகள் மயங்கி கிடப்பதை பார்த்த உறவினர்கள் உடனே அவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிள்ளைகள் சாப்பிட உணவில் மருந்து கலந்திருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் அவர்களுக்கு முதலுதவி அளித்து அவர்களை மேல்சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிறுமிகள் இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிறுமிகள் இருவரும் உயிர் இழந்ததை அடுத்து அவர்களின் தாய் சாந்தமீனா மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அங்கு சாந்த மீனா கூறிய வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, தனது கணவரின் சகோதரர் வைத்திருந்த பணம் அவ்வப்போது காணாமல் போனதாகவும், அதனை தனது மகள்கள்தான் எடுத்ததாகவும், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் என்ற பயத்தில் தந்து பிள்ளைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக சாந்தமீனா கூறியுள்ளார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சாந்தமீனாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.