தமிழகம்

கண்கலங்கவைக்கும் சம்பவம்.. 1 வயது பிஞ்சு குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை.. கணவன், மாமியார் கைது..

Summary:

குடும்பத்தினர் கொடுத்த வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தனது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற

குடும்பத்தினர் கொடுத்த வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தனது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

மயிலாடுதுறை அருகே குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வகுமாரி என்ற பெண்ணிற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துமுடிந்த நிலையில் அவர்களுக்கு ஒருவயதில் லிவிஷா என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் செல்வகுமாரி மற்றும் அவரது ஒரு வயது பெண் குழந்தை லிவிஷா இருவரும் நேற்று முன்தினம் மர்மமான நிலையில் உயிரிழந்து கிடந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக செல்வகுமாரியின் மாமியார் தனலட்சுமி செல்வகுமாரியிடம் 30 சவரன் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியது தெரியவந்தது. 

மாமியார் கொடுத்த வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் மிகுந்த மனவேதனையில் இருந்த செல்வகுமாரி தனது ஒருவயது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண் தனது குழந்தையை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement