தமிழகம்

மீண்டும் ஒரு அபிராமி! கள்ளகாதலுக்காக பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Summary:

mother killed her son for illegal affairs


ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சோமசுந்தரம் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கும் புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கிஷோர் என்ற 3 வயதில் மகன் இருந்துள்ளான்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து கள்ளகாதலன் மற்றும் அவரது மகன் கிஷோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிஷோருக்கு காயமடைந்து விட்டதாகவும், சொந்த ஊருக்கு மகனை அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும், புவனேஸ்வரி அவரதுதாயாரிடம் கூறியுள்ளார். 

அங்கு சென்று பார்த்தபோது கிஷோர் இறந்த நிலையில் கிடந்ததும், அவனது உடலை எரிப்பதற்கான செயலில் அவர்கள் ரகசியமாக ஈடுபட்டு கொண்டிருப்பதும் தெரிந்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது புவனேஸ்வரியின் தாய் புஸ்பவிற்கு. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, புவனேஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கிஷோர் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததால் இறந்து விட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரின் கள்ளக்காதலன் கார்த்திகேயன் மற்றும் புவனேஸ்வரியிடம் விசாரித்தபோது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகனை அடித்துக்கொலை செய்ததாக இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Advertisement