தஞ்சை மருத்துவக்கல்லூரி கழிவறைக்குள் குழந்தை கிடந்த வழக்கு!! விசாரணையில் வெளியான பகீர் உண்மை..

தஞ்சை மருத்துவக்கல்லூரி கழிவறைக்குள் குழந்தை கிடந்த வழக்கு!! விசாரணையில் வெளியான பகீர் உண்மை..


Mother killed born baby in Thanjavur Medical College

பெற்ற குழந்தையை கொலை செய்த கொடூர தாய்யை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பெண் சிசு ஒன்று சடலமாகா கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தநிலையில், ஆலக்குடியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், திருமணத்திற்கு முன் ஏற்பட்ட தவறான உறவால் குழந்தை பிறந்ததாகவும், கடந்த 2 ஆம் தேதி வயிறு வலி என கூறி மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், பிரசவ வலி வந்ததும் யாருக்கும் தெரியாமல், அங்கிருந்த பயன்படுத்தப்படாத கழிவறைக்குள் சென்று குழந்தையை பெற்றெடுத்துவிட்டு, அங்கிருந்த பிளஷ் டேங்கில் போட்டு குழந்தையை அமுக்கி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குழந்தையை கொலை செய்ய உடந்தையாக இருந்ததாக கூறி, ப்ரியதர்ஷினியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.