நாங்கள் ஆந்திராவுக்கு சளைத்தவர்கள் இல்லை! மதுரை ன்னா சும்மா வா.? தமிழ்நாட்டு மாமியாருக்கு குவியும் வாழ்த்துக்கள்!

நாங்கள் ஆந்திராவுக்கு சளைத்தவர்கள் இல்லை! மதுரை ன்னா சும்மா வா.? தமிழ்நாட்டு மாமியாருக்கு குவியும் வாழ்த்துக்கள்!


mother-in-law-treat-to-her-daughter-in-law

மதுரை மாவட்டம் மூன்றுமாவடி பகுதியை சேர்ந்த அஹிலா - அபுல்கலாம் தம்பதியனரின் மகனான அபுல்ஹசனுக்கு கடந்த 9ஆம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் திருமண விருந்திற்காக உறவினர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் ஊரடங்கு காரணமாக உறவினர்கள் பலரும் விருந்திற்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

இதன் காரணமாக வீட்டிற்கு வந்த மருமகள் ஷப்னாவிற்கு தானே விருந்து அளிக்க நினைத்த மாமியார் அஹிலா அசத்தலான பிரியாணி, பிரைட் ரைஸ், மட்டன், சிக்கன், மீன், முட்டை, காடை, ஆம்லேட், புரோட்டா, சப்பாத்தி தொடங்கி அனைத்து வகையான சூப்புகள், பழ ஜூஸ்கள், லெமன், புளியோதரை, தயிர் சாதம், அப்பளம் உள்ளிட்ட 101வகையான உணவுகளை தயாரித்து நீண்ட இலையில் வைத்து வழங்கியுள்ளார். மேலும் தானே தனது மருமகளுக்கு ஊட்டியும் விட்டுள்ளார். 

madurai

மாமியார் மருமகள் என்றாலே கீரியும், பாம்பும் போலத்தான் எதிரிகளாக இருப்பார்கள் என சீரியல்களில் சித்தரித்து வருவார்கள். ஆனால் இந்த மதுரை மாமியாரின் செயல் மாமியார் - மருமகள் உறவிற்கு புதிய இலக்கணத்தை உருவாக்கியுள்ளது. மதுரையில் மாமியார், மருமகளுக்கு வழங்கிய இந்த பிரமாண்ட விருந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் 67வகையான உணவுகளை மருமகனுக்கு வழங்கிய மாமியாரின் வீடியோ ட்ரெண்டாகிய நிலையில் மதுரையில் உள்ள ஒரு மாமியார் மருமகளுக்கு வழங்கிய இந்த பிரமாண்ட விருந்து, நாங்கள் ஆந்திரா வுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று தமிழ்நாட்டு மாமியாரின் செயல் அனைவரையும் வியக்கவைத்துள்ளது.