2 நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் யானை.! அருகில் சென்று பார்த்தபோது கண் கலங்க வைத்த சம்பவம்..!

Mother elephant standing 2 days in front of dead elephant calf


Mother elephant standing 2 days in front of dead elephant calf

இறந்து போன தனது குட்டியை விட்டு செல்ல மனமில்லாமல் தாய் யானை ஓன்று தனது குட்டியின் அருகில் இரண்டு நாட்களாக நின்றுகொண்டே இருக்கும் சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பள்ளிப்படி எனும் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்துக்குள் மூன்று யானைகள் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருந்துள்ளன. இதனை பார்த்து சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

யானைகள் நிற்கும் பகுதிக்கு வந்த வனத்துறையினர், அங்கு சோதனை செய்ததில் குட்டி யானை ஓன்று இறந்து கிடந்துள்ளது. இறந்து போன குட்டி யானையை சுற்றி தாய் யானையும், மேலும் 2 யானைகளும் நின்றுள்ளது.

இதனை அடுத்து குட்டி யானையின் உடலை மீட்க வனத்துறையினர் முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களை கிட்டே விடாமல் தாய் யானை விரட்டியுள்ளது. இதனால் அடுத்த நாள் காலை மீண்டும் குட்டி யானையின் உடலை மீட்க வனத்துறையினர் சென்றுள்ளனர்.

மற்ற இரண்டு யானைகளும் அங்கிருந்து சென்ற நிலையில் தாய் யானை மட்டும் குட்டி யானையின் அருகிலேயே நின்றுள்ளது. இந்தமுறையும் தாய் யானை வனத்துறையினரை கிட்டே நெருங்கவிடவில்லை. தாய் யானையின் விலகிச்செல்லும் வரை அதை தொந்தரவு செய்யவேண்டாம் என முடிவு செய்த வனத்துறை அதிகாரிகள், யானையின் நிலை குறித்து தெரிந்துகொள்ள இரண்டு வனத்துறை பணியாளர்களை நியமித்துள்ளனர்.

இறந்து போன குட்டியை பிரிந்துசெல்ல மனமில்லாமல் தாய் யானை இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பது பார்ப்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது.