தமிழகம்

தாத்தாவுடன் கடைக்கு போன பேரன்கள் தீயில் கருகி மரணம்! வேதனை தாங்கமுடியாம இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Summary:

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரியில் மோகன் என்ற 55 வயது நிறைந்த நபர் பட்டாசுக் கட

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரியில் மோகன் என்ற 55 வயது நிறைந்த நபர் பட்டாசுக் கடை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பேரன்கள்  தேஜஸ் (8), தனுஜ்மோகன் (6) ஆகியோரை தனது கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு பட்டாசு வாங்க வந்தவருக்கு அதனை மோகன் வெளியே சென்று வெடித்துக் காட்டியுள்ளார். இந்தநிலையில் சிறு தீப்பொறி ஒன்று பறந்து சென்று கடைக்குள் விழுந்துள்ளது.

இதனால் அங்கிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடிக்க தொடங்கியுள்ளது. இதனை கண்டு பதறிப்போன மோகன் தனது பேரன்களை காப்பாற்ற கடைக்குள் சென்ற நிலையில், வெளியே வர முடியாமல் மூன்று பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பட்டாசு விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் தாய் வித்யாலட்சுமி. கணவர் பிரிந்து சென்ற நிலையில்,அவர் தனது அப்பா மோகனுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பட்டாசு விபத்தில் தனது தந்தை மற்றும் இரு மகன்களையும் இழந்த நிலையில் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தான் மட்டும் ஏன் இருக்க வேண்டும் என எண்ணி லத்தேரி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதில் உடல் சிதறி இறந்த அவரது உடலை மீட்டு ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    


Advertisement