தமிழகம்

அம்மா..! அம்மா..! காபாத்தும்மா..! நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற நீச்சல் தெரியாமல் குட்டையில் குதித்த அம்மா..! நெகிழ வைக்கும் சோக முடிவு...!

Summary:

Mother and son dead in hut near cudaloor

குட்டைக்குள்  மகனை காப்பாற்றும் முயற்சியில் தாய், மகன் இருவரும்  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம்  ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் அவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 8 வயதில் ஆரியன் என்னும் மகனும் உள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு அருகில் இருக்கும் கல்குவாரி குட்டைக்கு திவ்யா துணி துவைக்க செல்வது வழக்கம்.

அந்த வகையில் தனது மகன் ஆரியனை அழைத்துக்கொண்டு வழக்கம்போல் துணி துவைக்க கல்குவாரி குட்டைக்கு சென்றுள்ளார் திவ்யா. திவ்யா துணி துவைத்துக்கொண்டிருக்க, அவரது மகன் குட்டைக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கால் தடுக்கி ஆரியன் குட்டைக்குள் விழுந்துள்ளார்.

 நீச்சல் தெரியாத அவரது தாய் திவ்யா தனது மகனை காப்பாற்றும்படி கதறியுள்ளார். ஆனால் அருகில்  இல்லாததால் நீச்சல் தெரியாத நிலையில் தானும் குட்டைக்குள் இறங்கி மகனை மீட்க போராடியுள்ளார்.  போராட்டத்தில் மகனையும் மீட்க முடியாமல், தானும் வெளியேற முடியாமல் இருவரும் குட்டைக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளனனர்.

இதனை அடுத்து தாய் மகன் இருவரையும் தேடி சென்றவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனனர். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் இருவரின் உடலையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மகனை காப்பாற்ற சென்ற தாயும் ஒரே குட்டையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement