இரண்டு மகள்களுடன் இடுப்பில் கயிற்றை கட்டி,. 10 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட தாய்... குடும்ப பிரச்சனையால் கொடூரம்..!



mother and daughter suicide for family problems

மலையடிபள்ளத்தில் தாய் தனது இரண்டு மகள்களுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் பகுதியில், 10 அடி ஆழம் கொண்ட நீர் நிரம்பியிருந்த மலையடிபள்ளத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது இரண்டு மகள்களுடன் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு கீழே குதித்துள்ளார். நேற்று காலை 10 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்த தகவலானது காவல்துறையினருக்கு தெரியவரவே உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

mother

ஆனால் மூவரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது புதுக்கோட்டை மாவட்டம் மாஞ்சான் விடுதி பகுதியை சேர்ந்த மாரிக்கண்ணு மற்றும் மகள்கள் தர்ணிகா, கோபிகா தான் தற்கொலை செய்தது என்பது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் தெரியவந்துள்ளது.