"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
கழுத்தைநெறித்த கந்துவட்டிக்காரன்... தாய் - மகள், மகனுடன் விபரீதம்..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!
கடன் பிரச்சினை காரணமாக தாய், மகள் தற்கொலை செய்து வழக்கில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அடுத்த பூசிணியூத்து கிராமத்தை சேர்ந்தவர் நல்லுச்சாமி. இவரது மனைவி ஆண்டிச்சி (வயது 35). தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
பூசிணியூத்து கிராமத்தில் ஆண்டிச்சி மட்டும் தனது குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், விவசாயம் மற்றும் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பால் பண்ணை நடத்துவதற்காக ஆண்டிச்சி, அதே ஊரைச் சேர்ந்த அடைக்கலம் என்பவரிடம் கடன் வாங்கிய நிலையில், அதிகமான வட்டி காரணமாக பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இது மட்டுமின்றி தான் குடியிருந்த வீட்டையும் அடைக்கலத்திற்கு ஈடாக கொடுத்துள்ளார். இருப்பினும் கொடுத்த பணத்தை கேட்டு அடைக்கலம் தொந்தரவு செய்து வந்ததால், மனமுடைந்த ஆண்டிச்சி தனது மகள் மற்றும் மகனுடன் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் விஷம் மாத்திரையை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த தற்கொலை முயற்சியில் ஆண்டிச்சி மற்றும் காவியா இறந்ததையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அடைக்கலம், ஆண்டிச்சியின் அப்பா மொக்கராஜிடம் மகள் வாங்கிய கடனை கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் மொக்கராஜ், அடைக்கலம் மீது வருசநாடு காவல்துறையினரிடம் புகார் கொடுத்த நிலையில், இருவரை தற்கொலைக்கு தூண்டியதற்காகவும், கந்துவட்டி தடை சட்டத்திலும் வழக்குப்பதிந்து அடைக்கலத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.