தமிழகம்

ஏடிஎம் மிஷினில் 200 ரூபாய் அழுத்தினால் 500 ரூபாய்! அலைமோதிய பொதுமக்கள்!

Summary:

money comes wrongly in ATM

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில், ரூ.200 எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 வந்ததால் பொதுமக்கள் வியப்பில் மீண்டும் முயற்சித்துள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த ஏடிஎம் மையத்திற்கு வந்து  அதிகமாக பணத்தை எடுத்துள்ளனர். 

இந்த தகவல் வேகமாக பரவியதால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இயந்திரத்தில் ரூ.200 பட்டனை அழுத்தி ரூ.500 ஆக எடுத்து சென்றுள்ளனர்.

500 rupees க்கான பட முடிவு

இதனையடுத்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏடிஎம் மையத்தை பூட்டினர். பின்னர் அந்த மையத்தைப் பூட்டினர். அங்கு நடந்த பிரச்சனைக்கு ரூ.200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூ.500 வைத்ததே காரணம் என கூறப்படுகிறது. இதனால் தான் வாடிக்கையாளர்களுக்கு 200-க்கு பதில் 500 ஆக கிடைத்துள்ளது. 

அங்கு எவ்வளவு தொகை எடுக்கப்பட்டது என்பது குறித்தும், இதனை வைத்த தனியார் நிறுவனமே அதற்கான இழப்பிற்கான  பொறுப்பை l ஏற்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement