தமிழகம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது குழந்தை! கள்ளகாதலனும், தாயும் சேர்ந்து செய்த கொடூரம்!

Summary:

mom killed her daughter for illegal affairs


பாடம் படிக்காமல் டிவி பார்த்து கொண்டிருந்த 5 வயது குழந்தையை தாய் அடித்து, வெயிலில் நிற்கவைத்து துன்புறுத்தியதால் சிறுமி மரணம் அடைந்தார் என்ற செய்திகள் நேற்றைய தினத்தல் வைரலானது. போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை தாய், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்தே கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

நித்யகமலாவிற்கும் தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த பிரசன்னா என்பவருக்கும் திருமணமாகி லத்திகா ஸ்ரீ என்ற மகள் பிறந்தது தெரியவந்துள்ளது. ஆனால் நித்திய கமலாவிற்கும் பிரசன்னாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் நித்யகமலாவுக்கும் அவருடைய உறவினர் முத்துப்பாண்டியன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதலை அறிந்த பிரச்சன்னா நித்யகமலாவை குழந்தையுடன் விட்டுவிட்டு சென்றுவிட்டார் என கூறப்படுகிறது. இதனையடுத்து நித்யகமலா, கள்ளக்காதலனுடன் நிரந்தரமாக இருக்க முடிவெடுத்து, திருச்சி அருகே தொட்டியம் பகுதிக்குச் என்று அங்கு தாங்கள் கணவன், மனைவி என்று கூறி வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நித்யகமலாவுடன் அவருடைய குழந்தை எப்போதும் ஒட்டிக்கொண்டே இருந்ததால் தனது உறவுக்கு இடைஞ்சலாக இருப்பதை அறிந்த முத்துப்பாண்டியன், ஆத்திரமடைந்து குழந்தையை அடித்துள்ளார். அவருடன் சேர்ந்து நித்யகமலாவும் குழந்தையை அடித்துள்ளார். அதனால் தான் குழந்தை காயப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து முத்துப்பாண்டி தலைமறைவானதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் நித்யகமலாவை கிடுக்குபிடி விசாரணை செய்தனர். அதில் முத்துப்பாண்டி தனது கணவர் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு, அவர் தனது கள்ளக்காதலர் என்றும், இருவரும் சேர்ந்துதான் குழந்தையை அடித்து கொலை செய்ததாகவும் கூறினார். இதனையடுத்து முத்துபாண்டியையும் நித்யகமலாவையும் போலீசார் கைது செய்தனர். 


Advertisement