தமிழகம்

3 குழந்தைகளின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு தாய் செய்த பகீர் செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

3 குழந்தைகளின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு தாய் செய்த பகீர் செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!

வேலுார் மாவட்டம், வேலுார் சலவன்பேட்டை ஆனகுளத்தம்மன் பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ்குமார்- ஜீவிதா தம்பதி. இவர்களுக்கு 7 வயது நிரம்பிய அட்சயா என்ற மகளும், 5 வயது நிரம்பிய நந்தகுமார் என்ற மகன் மற்றும் ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான தினேஷ்குமார் தினமும் மது அருந்திவிட்டு ஜீவிதாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக கணவன் மீது கோவம் கொண்ட ஜீவிதா அவரது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து செப்டம்பர் 22-ஆம் தேதி சலவன்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு ஜீவிதா சென்றுள்ளார். இந்த நிலையில் ஜீவிதாவின் தம்பி நலம் விசாரிப்பதற்காக வியாழக்கிழமை மாலை ஜீவிதாவின் செல்போனுக்கு போன் செய்துள்ளார்.

ஜீவிதாவின் தம்பி ஜெகதீஷ் பலமுறை தொடர்பு கொண்டும் ஜீவிதா அழைப்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், ஜீவிதாவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரம் கதவை தட்டியும் ஜீவிதா வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெகதீஷ் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தாழ்ப்பாலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது ஜீவிதா தனது 3 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நான்கு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த ஜீவிதா தனது 3 குழந்தைகளையும் துணியால் கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் தலைமறைவான தினேஷ்குமாரை தேடி வருகின்றனர்.


Advertisement