மகனை வைத்துக்கொண்டே வாலிபருடன் தாய் செய்த செயல்!. இறுதியில் நேர்ந்த கொடூரம்!.

மகனை வைத்துக்கொண்டே வாலிபருடன் தாய் செய்த செயல்!. இறுதியில் நேர்ந்த கொடூரம்!.


mom killed by her illegal releation


வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே குருவராஜா பேட்டையில் காந்தி நகரை சேர்ந்தவர் பாபு  - செல்வி தம்பதியினர். இவர்களுக்கு ஸ்ரீகாந்த் என்ற 6 வயது மகனும் உள்ளார்.

பாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் செல்வி துளசி என்ற வாலிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு  விபத்தில் இறந்துவிட்டார்.

இந்த நிலையில், செல்வி தனது மகன் ஸ்ரீகாந்துடன் தனியாக வசித்து வந்துள்ளார். செல்வி அரக்கோணத்தில் இருந்து திருத்தணி செல்லக்கூடிய சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

நேற்று முன் தினம், ஆடைகள்  களைந்து செல்வி இறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து இவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

மேலும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

போலீசாரிடம் சிறுவன் கூறுகையில், நானும் எனது அம்மாவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபொழுது, எங்கள் வீட்டிற்கு ஒருவர் வந்தார். அவர் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து செல்வார்.

 எனது அம்மா என்னை ஒரு அறையில் தூங்க வைத்துவிட்டு மற்றொரு அறைக்கு சென்று விட்டார். அந்த நபரும் உள்ளே சென்றார்.நான் தூங்கி எழுந்து பார்த்தபோது, அந்த நபர் எனது அம்மாவின் கழுத்தை காலால் மிதித்து கொண்டிருந்தார்.

நான் பயத்தில் சத்தம் போடாமல் படுத்து இருந்தேன் சிறிது நேரத்தில் அவர் வீட்டிலிருந்து பீரோவை திறந்து அதில் இருந்த பொருட்களை சிதறி போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார் என்று போலீசாரிடம்  கூறினான் சிறுவன்.

இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.