அரசியல் தமிழகம்

சென்னை வரும் பிரதமர் மோடி.! 3 மணி நேரம் மட்டுமே.! பிரதமருக்கு 4 அடுக்கு பாதுகாப்பு.!

Summary:

பிரதமர் மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை வரும் பிரதமர் மோடிக்கு 4 அடுக்

பிரதமர் மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை வரும் பிரதமர் மோடிக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. சென்னைக்கு வரும் பிரதமர் மோடி 3 மணி நேரம் மட்டுமே இருக்கப்போவதாக பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகிற 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, காலை10.35 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

பிரதமர் மோடி சென்னையில் மெட்ரோ ரெயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பிறகு மூன்று மணி நேர சென்னை பயணத்தை முடித்து கொண்டு மதியம் ,1.35 மணிக்கு கொச்சி செல்கிறார்.
 


Advertisement