அரசியல் தமிழகம்

அழைப்பு விடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.! தமிழகம் வரும் பிரதமர் மோடி.! எப்போது தெரியுமா.?

Summary:

முதல்வர் பழனிசாமியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வரவுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் முக்கிய தலைவர்களாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல் முதல்முறையாக திமுகவும், அதிமுகவும் போட்டியிடுகிறது. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

இந்நிலையில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது கட்சி சார்பாக  மாவட்டம் மாவட்டமாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக - பாஜகவுடனும், திமுக - காங்கிரஸ்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. சமீபத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். 

இதனிடையே அண்மையில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்ததுடன், பிரதமரை தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்டத் திட்டங்களையும் திறந்து வைக்கவுள்ளார் .


Advertisement