தை பிறந்தால் வழி பிறக்கும்..!!என்னுடைய சாதனைகளை நானே முறியடித்துக்கொண்டிருக்கிறேன்! மோடி பெருமிதம்.!



Modi open new hospital

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று ஜனவரி 12 ஆம் தேதி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை துவங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின்படி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகையில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டு அந்த  மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், சென்னை பெரும்பாக்கத்தில் ரூ. 24 கோடி மதிப்பில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மையக்கட்டிடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

தமிழில் பேசி தனது உரையை துவங்கிய பிரதமர் மோடி, தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம். தை பிறந்தால் வழி பிறக்கும். அமெரிக்காவில் உலகத்தின் மிகப்பழமையான மொழியான தமிழில்  சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக அமைந்தது.


ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதுவே முதல் முறை. உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக்கல்லூரிகளை திறந்ததே சாதனையாக இருந்தது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்லூரி திறப்பில் என்னுடைய சாதனைகளை நானே முறியடித்துக்கொண்டிருக்கிறேன். மருத்துவப்படிப்புகளை ஊக்கப்படுத்த மத்தியில் இருந்த முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.