தமிழகம் இந்தியா

பிரதமர் மோடிக்கு தமிழகத்தை சேர்ந்த நபர் சாதாரணமாக எழுதிய கடிதம்! அந்த ஏழை நபரின் மகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

Summary:

modi help to tamilnadu school girl

பிரதமர் மோடி பள்ளி குழந்தைகள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். அதிலும் தமிழகத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தையை கடந்த 6 வருடங்களாக ஒரு நல்ல பள்ளியில் படிக்கவைத்து வருகிறார். 6 வருடங்களுக்கு பிறகு இந்த விஷயம் இணையத்தில் பரவி வருவதால் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் பவித்ரமாணிக்கம் என்ற கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் தனது மகள் ரக்ஷிதாவை. திருவாரூர் கேந்திரிய வித்யாலயாவில் சேர்க்க வேண்டும் என்பதை கனவாக வைத்துள்ளார். எனவே அந்த பள்ளியிலே தனது மகளை படிக்கவைக்க விரும்பினார். ஆனால் குணசேகரின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளராத அவர் பாரதப் பிரதமர் மோடிக்கு எளிமையாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் அந்த கடிதத்திற்கு பதில் வரும் என்று குணசேகரன் துளியளவு கூட எதிர்பார்க்காத வகையில், பிரதமர் கோட்டாவிலேயே ரக்ஷிதாவுக்கு திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சீட்டு உறுதி செய்யப்பட்டு பிரதமரிடம் இருந்து அவருக்கு கடிதம் வந்துள்ளது. இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் கடவுளை பிரார்த்தனை செய்துள்ளார்.

மேலும் குணசேகரன் ஏழ்மை என்பதால் அவரின் குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து அந்த வருடத்தில் இருந்து இன்று வரை பிரதமர் அலுவலகமே ரக்ஷிதாவுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருவது தற்பொழுது தெரியவந்துள்ளது. ஒரு சிறிய கிராமத்தில் இருந்து  கடிதம் எழுதிய சாதாரண ஒரு மனிதனின், உணர்வையும் மதித்து. கடிதம் எழுதிய பாரதப் பிரதமரின் செயலை ஒட்டுமொத்த மக்களும் பாராட்டி வருகின்றனர்.


Advertisement