தமிழகம்

ரீசார்ஜ் செய்ய வந்த இளம் பெண்.. போன் நம்பரை வாங்கி தம்பி என்ன வேலை பாத்துருக்கார் தெரியுமா.?

Summary:

Mobile shop owner send bad videos to girl who came for recharge

செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய தனது கடைக்கு வந்த இளம் பெண்ணின் வாட்சப் எண்ணிற்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி, தற்போது கம்பி எண்ணி வருகிறார் இளைஞர் ஒருவர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கிளியனூர் அருகே உள்ளது அகரவல்லம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் முகமது அப்ரிடியின் கடை என்றால் மிகவும் பிரபலம். செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது, பண பரிவர்த்தனை என அந்த பகுதி கஸ்டமர்களை தனது கைக்குள் வைத்திருந்துள்ளார் 21 வயதாகும் முகமது அப்ரிடி.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது செல்போன் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்வதற்காக முகமது அப்ரிடியின் கடைக்கு சென்றுள்ளார். பெண் கூறிய ரீசார்ஜ் தொகை, அவரது தொலைபேசி எண் அனைத்தையும் குறித்துவைத்துக்கொண்டு ரீசார்ஜ் செய்து அனுப்பியுள்ளார் முகமது அப்ரிடி.

அந்த பெண்ணும் அங்கிருந்து நடைய கட்ட, சிறிது நேரத்தில் அவரது வாட்சப் எண்ணிற்கு ஆபாச படங்கள் வர தொடங்கியுள்ளது. யாருடா நமக்கு போய் இந்த மாதிரி படங்களை அனுப்புறதுனு விசாரித்து பார்த்தால் செல்போன் கடைக்காரர் அப்ரிடியின் வேலைதான் அது என தெரியவந்துள்ளது.

சரி ஏதோ தவறாக அனுப்பிவிட்டார் என அந்த பெண்ணும் அதை கண்டுகொள்ளாமல் விட, அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்து ஆபாச படங்களை அனுப்பியுள்ளார் முகமது அப்ரிடி. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இதுகுறித்து மாவட்ட எஸ்பி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் கொடுத்துள்ளார்.

மெசேஜில் வந்த புகாரை அடுத்து போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அப்ரிடியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement