அரசியல் தமிழகம்

தேசத்திற்கான உங்கள் சேவை தொடரட்டும்! பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

70-வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடி வரும் இந்தியாவின் பிரதமர் நரேநரேந்திரமோடி அவர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடிக்கு 70வது பிறந்த தினம். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், "மாண்புமிகு பிரதமர் நரேநரேந்திரமோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளைக் கொண்டு, தேசத்திற்கான உங்கள் சேவை தொடரட்டும்." என பதிவிட்டுள்ளார் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement