கருணாநிதி, ஜெயலலிதாவை தொடர்ந்து டெல்லியில் முதன்முறையாக மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் கௌரவம்.!

கருணாநிதி, ஜெயலலிதாவை தொடர்ந்து டெல்லியில் முதன்முறையாக மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் கௌரவம்.!


mk stalin will go to delhi

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக   மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து நாளை  17-ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

MK Stalin

இந்நிலையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்து வருவதற்கு தனது சிறப்பு பாதுகாப்பு படையின் 'புல்லட் புருப்' காரை பிரதமர் மோடி அனுப்புகிறார். இது போன்ற சிறப்பு கௌரவம், முன்னால் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கவுள்ளது.