தமிழகம் விளையாட்டு

அனல் பறக்கும் தேர்தல் சமயத்திலும் சச்சின் மீது அக்கறை காட்டிய மு.க. ஸ்டாலின்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

Summary:

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அவர் கடந்த 27-ந்தேதி தனது டுவிட்டரி

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அவர் கடந்த 27-ந்தேதி தனது டுவிட்டரில் தெரிவித்தார். இதனால் அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவர்கள் கூறிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என்று தெரிவித்தார். மேலும் தனது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில், சச்சின் டெண்டுல்கர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 6 நாட்களுக்கு பிறகு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சச்சின் டெண்டுல்கர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில்,தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன். தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று அலையினை விழிப்போடு எதிர்கொள்ளுமாறும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.


Advertisement