திமுக ஆட்சியை ஏற்று ஓராண்டு நிறைவு! மக்களுடன் மக்களாக முதல்வர் மு.க ஸ்டாலின் செய்த காரியம்!!

திமுக ஆட்சியை ஏற்று ஓராண்டு நிறைவு! மக்களுடன் மக்களாக முதல்வர் மு.க ஸ்டாலின் செய்த காரியம்!!



Mk stalin travel in government bus

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைப்பெற்று மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், திமுக கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்கள் குறித்து வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள தனது தாயார் தயாளு அம்மாள் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றுள்ளார். பின்னர் அண்டை வீட்டாரிடமும் வாழ்த்துக்களை பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்திற்கு மரியாதை செய்ய காரில் புறப்பட்டுள்ளார்.

MK Stalin

இந்நிலையில் கார் ஆர்.கே சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரை நிறுத்தி கீழே இறங்கிய முதல்வர் அவ்வழியே வந்த அரசு பேருந்து ஒன்றில் ஏறி பயணம் மேற்கொண்டுள்ளார். பேருந்தில் திடீரென முதல்வர் ஏறியதும் உள்ளே இருந்த அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் மு.க ஸ்டாலின் பெண் பயணி ஒருவரிடம், தாங்கள் அறிவித்த பெண்களுக்கான இலவச பயண திட்டம் குறித்து கருத்துக்களை கேட்டுள்ளார். 

பின்னர் அவர்களது தேவைகளை கேட்டு நிறைவேற்றுவதாக உறுதியளித்த அவர் மற்றொரு நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கி  பின்னர் காரில் மு.கருணாநிதி அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்துள்ளார்.