மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது நீதிமன்றம்!

மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது நீதிமன்றம்!


m.k stalin cases cancelled


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பதவியில் இருந்தபோது கொடநாட்டில் ஓய்வு எடுப்பது குறித்தும், 2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது தொடர்பாகவும், மேலும், சில சம்பவங்கள் தொடர்பாகவும், கருத்துகளை தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

 இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது கிரிமினல் அவதூறு வழக்குகள் பல சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சித் தலைவர்கள் தீவிர தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, தங்கள் ஆளுமையை, செயல்பாடுகளில் வெளிப்படுத்த வேண்டும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும். 

court

மேலும், வலுவில்லாத ஆதாரங்களுடன் அவதூறு வழக்குகள் தொடருவதை நிறுத்த வேண்டும், எனக் கூறி மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், மீதமுள்ள 12 அவதூறு வழக்குகளை அடுத்த வாரம் விசாரிப்பதாக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.