"தாகத்திற்கு தண்ணீர் குடிக்க முடியவில்லை.." அமைச்சரை கண்கலங்க வைத்த மருத்துவர்!
நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்டி தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.
அதே சமயத்தில் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் "அழித்திடுவோம் உயிர்க்கொல்லியை" என்ற தலைப்பில் குட்டி கவிதை, கதை என ஒரு கடிதம் மூலம் அனைவருக்கும் நன்றி செலுத்தியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள்,

"கொரோனா உலகை நடுங்க வைக்கும் ஒற்றைச்சொல்! உலகமே பயந்துகிடக்கிறது! கண்ணுக்குத் தெரியாத இந்த உயிர்க்கொல்லியின் வேகத்திற்கு எதிராக துணிந்து நிற்பது மட்டுமல்ல.. ஒவ்வொருவரும் இடைவெளிவிட்டு தூர நிற்பதே சால சிறந்தது.!
வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு ஆய்விற்கு சென்றபோது காற்று புகாத கவசஉடையும் முககவசம் அணிந்த அவர்களிடம் கணிவுடன் கேட்டேன்... உங்களுக்கு ஏதாவது சிரமம் இருக்கிறதா என்று.. மருத்துவர் ஒருவர் சொன்னார்,

"சேவை செய்வதே எங்கள் பணி மனமாற செய்கிறோம் ஆனால் ஒரு சிரமம்.. கவச உடை அணிந்திருப்பதால் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கத்தான் முடியவில்லை" என்று I was emotional.. என் கண்களில் கண்ணீர் நிறைந்தது. மகத்தான மருத்துவசேவை கண்டு மலைத்து போனேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும், "இதையெல்லாம் உணர்ந்து - நாம் விழிப்போடு இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறைக்கூவல் விடுக்கின்றேன்.." என கூறியுள்ளார்.
#appreciation: Join me to appreciate the selfless service of medical fraternity!! The real warriors fighting #Covid19 on behalf of us. #clapforourcarers #Vijayabaskar #TNGovt pic.twitter.com/1DGUJbB4Iy
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 22, 2020