அரசியல் தமிழகம் TN Election 2021

இந்த உசுரு இருக்கதே அதற்காகத்தான்!! சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்டிமென்ட் வீடியோ..!

Summary:

கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரை தெகுதிக்காகவும், தொகுதி மக்களுக்காகவும் உழைப்பேன் என அமைச்சர்

கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரை தெகுதிக்காகவும், தொகுதி மக்களுக்காகவும் உழைப்பேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதிலும் இன்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும்நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் கடைசி நாளான இன்று அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், சென்டிமெண்டாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, "கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை தொகுதிக்காக உழைப்பேன், விராலிமலை பூமிதான் நான் கும்பிடும் சாமி எனவும், தொகுதி மக்கள்தான் என்னுடைய உறவு, உங்களுக்காக உழைக்கிறதுக்கு மட்டும்தாங்க இந்த உசுரு, மெழுகுவர்திமாதிரி உங்களுக்காக உருகி உருகி நா உழைச்சிட்டு இருக்கேங்க, என்னுடைய வாழ்க்கையாவே உங்களுக்காக அர்பணித்துவிட்டேன்" என பேசியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

முன்னதாக அதே விராலிமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் தமக்கு ஒருமுறை வாய்ப்பளிக்குமாறு தேம்பித் தேம்பி அழுததும் குறிப்பிடத்தக்கது.


Advertisement