ஊர்களின் ஆங்கிலப் பெயர் மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்! அமைச்சர் பாண்டியராஜன்!

ஊர்களின் ஆங்கிலப் பெயர் மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்! அமைச்சர் பாண்டியராஜன்!


minister pandiarajan talk about English name

தமிழகத்தின் ஊர்ப்பெயர்களை தமிழில் இருக்கும் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் எழுத தமிழ் வளர்ச்சித்துறை முடிவு செய்தது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக 1,018 ஊர்களின் ஆங்கிலப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பில் மாற்றப்பட்டன. 

எடுத்துக்கட்டாக, தூத்துக்குடி என்பது ஆங்கிலத்தில் 'Tuticorin' என எழுதப்பட்டு வந்தது . இதை தமிழில் உச்சரிப்பது போன்றே ஆங்கிலத்திலும் ‘Thooththukkudi' என மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அரசாணை திரும்ப பெறப்படுவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். 

tamil name

இந்நிலையில் தமிழக அரசின் அந்த அரசாணை திரும்ப பெறப்படுவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், ஊர்ப்பெயர்கள் தமிழில் இருப்பது போன்றே ஆங்கிலத்தில் எழுத வல்லுநர்களைக்கொண்டு மொழிமாற்றம் செய்யப்பட்டு, சில பிழைகள் மாற்றப்படும் என்றும், இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு விரைவில் புதிய அரசாணை வெளிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.