சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவில் இணைவாரா? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பதில்!

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவில் இணைவாரா? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பதில்!minister jeyakumar talk about sasikala

டெல்லிக்கு அரசு முறை பயணமாக சென்ற அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், சிறுபான்மையின மக்களின் இதயத் துடிப்பாக அதிமுக கட்சியும், ஆட்சியும் உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு நூற்றுக்கும் மேல் எவ்வளவு உயரம் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதுகாப்பு அளிப்பது தான் அதிமுக அரசு என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் கணக்கெடுப்பில் சில ஷரத்துகள் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது என்றும், இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய வகையில் அழுத்தம் தரப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

jayakumar

சசிகலா தண்டனை காலம் நிறைவடைந்து சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவில் இணைவாரா என செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தாலும் அதிமுகவில் இணையமுடியாது. இதுதான் நேற்றைய, இன்றைய, நாளைய நிலை என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.